அமமுக செய்தி தொடர்பாளர் பதவி- புகழேந்தி திடீர் நீக்கம்!

திங்கள் செப்டம்பர் 16, 2019

அ.ம.மு.க.வின் செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வந்த புகழேந்திக்கு மீண்டும் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்படவில்லை.

அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர்கள் பெயர் பட்டியலை தினகரன் இன்று வெளியிட்டார். அதில் 14 பேர் பெயர் இடம்பெற்றுள்ளது.

பழனியப்பன், சி.ஆர்.சரஸ்வதி, தாம்பரம் நாராயணன், வெற்றிவேல், ரெங்கசாமி, மாரியப்பன் கென்னடி, செந்தமிழன், டேவிட் அண்ணா துரை, இளந்தமிழ் ஆர்வலன், ஜெமீலா, அதிவீரபாண்டியன், வீரவெற்றிபாண்டி, காசிநாத பாரதி, முஸ்தபா.

அ.ம.மு.க.வின் செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வந்த புகழேந்திக்கு மீண்டும் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புகழேந்தி தினகரன் பற்றி பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கட்சி தலைமைக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது.

இந்த நிலையில் அவரது செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.