அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக மீண்டும் ஜெயலலிதா தேர்வு

ஞாயிறு நவம்பர் 22, 2015

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக்கத்தின் பொதுச்செயலாளராக உள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் பொதுச் செயலாளராக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கட்சியின் பொருளாளராக ஒ.பன்னீர்செல்வத்தையும், அவைத் தலைவராக மதுசூதனனையும் ஜெயலலிதா நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக ஒ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளராக பா.வளர்மதியும், அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரன், கோகுல இந்திரா, விசாலாட்சி நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நாஞ்சில் சம்பத்தும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக தமிழ்மகன் உசேனும், அ.தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவராக வேணுகோபாலும், நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், கழக கொள்கை பரப்புச் செயலாளர்களாக மு. தம்பிதுரை, செ. செம்மலை,  துரை கோவிந்தராஜன் (கழக விவசாயப் பிரிவுத் தலைவர்), தாடி ம.ராசு (அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர்),  ஆர்.சின்னசாமி (அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்), ஏ.ஜஸ்டின் செல்வராஜ் (கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர்), ஏ.அன்வர்ராஜா (கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்), ஆர்.பி.உதயகுமார் (கழக ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்), எஸ்.கோகுல இந்திரா (கழக அமைப்புச் செயலாளர் மற்றும் கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்).

ஏ.கே.செல்வராஜ் (கழக அமைப்புச் செயலாளர் மற்றும் கழக மனுக்கள் பரிசீலைனக் குழு உறுப்பினர்), டாக்டர் பி.வேணுகோபால் (கழக மருத்துவ அணிச் செயலாளர் மற்றும் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர்), வி.எஸ்.சேதுராமன் (கழக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர்).  ஏ.நவநீதகிருஷ்ணன் (கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் மற்றும் கழக மாநிலங்களவை குழுத் தலைவர்).

எஸ்.ராஜூ (கழக அமைப்புச் செயலாளர்), கே.கே.கலைமணி (கழக மீனவர் பிரிவுச் செயலாளர்), உடுமலை கே.ராதாகிருஷ்ணன் (கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்), ஏ.பாப்பாசுந்தரம் (கழக அமைப்புச் செயலாளர்), எஸ்.ஜெனிபர் சந்திரன் (கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர்).

ஆர்.கமலகண்ணன் (கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்), நாஞ்சில் சம்பத் (கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்), எல்.சசிகலா புஷ்பா (கழக மகளிர் அணிச் செயலாளர்), ப.குமார் (கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்), எஸ்.ஆர்.விஜயகுமார் (கழக மாணவர் அணிச் செயலாளர்), அஸ்பயர் கே.சுவாமிநாதன் (கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர்), வி.அலெக்சாண்டர் (கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்), பி.கே.வைரமுத்து (கழக விவசாயப் பிரிவுச் செயலாளர்), டாக்டர் மு.கோபால் (கழக அமைப்புச் செயலாளர்), எஸ்.வளர்மதி (கழக அமைப்புச் செயலாளர்), ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (கழக அமைப்புச் செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக் கழகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.