அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளது!!

சனி மே 30, 2020

எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 5 மற்றும் 6ம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும்.அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் சூதாட்ட விடுதிகள் என்பனவும் குறித்த இரு தினங்களில் மூடப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.