அனைவருக்கும் முக்கியமான செய்தி!!!

புதன் அக்டோபர் 07, 2020

நான் தெரிவிக்கவிருக்கும் கருத்து பலருக்கு கசப்பாகவிருக்கலாம் அதற்காக உண்மையையும் யதார்த்தங்களையும் வெளியில் பேசாமலிருப்பது சமூகஅக்கறை கொண்டவருக்கு பொருத்தமில்லாத வகையில் அமைந்துவிடும்.

Bigg boos என்ற பெயரில் வரும் தொலைக்காட்சி நிகழ்வு வணிகர்களின் பெரும்முதலீடு இதில் அப்பாவித்தனமாக இரசிகர்களான மக்கள் ஆவலோடு காத்திருந்து இந்த நிகழ்வின் வருகைக்கு ஏங்குகின்றார்கள்.

இதை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே கருதாமல் அதைப்பற்றி தங்கள் நண்பர்களோடு அளாவுகின்றார்கள்.

அளவுகோலெடுத்து கருத்துக்களை விதைக்கின்ற முற்போக்காளர் நடிகர் கமல் அவர்கள் இதற்குத்தலமைப்பொறுப்பு வகிப்பது வேடிக்கையாகவிருக்கின்றது.கோடி கொடுத்தால் முற்போக்காளர்கள் சாமிவேசம் போடவும் தயங்கமாட்டார்கள்.

மக்களே எனது அன்புக்குரியவர்களே  நாம் செய்வதற்கு
எவ்வளவோ இருக்கின்றது.உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்திலெடுங்கள் உங்கள் உடல்நலன்களைப்பேணுங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள் உடற்பயிற்சி
செய்யுங்கள் நல்ல புத்தகங்களை வாசியுங்கள் பிள்ளைகளோடு நேரத்தைச்செலவிடுங்கள்.

தாய்நாட்டின் நலன்சார்ந்து சிந்தியுங்கள் நாங்கள்  அறிவியலில் சிறந்தவர்கள் என்பதை நிரூபிக்க முன்வாருங்கள்.இது போன்ற பிற்போக்குத்தனமான நிகழ்வுகளை ஆதரிக்காதீர்கள்.

எமக்கான காத்திருப்புக்கள் இவைகள் அல்ல.நான் நேசித்த பகுத்தறிவாளன் கமல் அவர்கள் ஒரு சிறந்த நடிகன்.ஆனால்???

=முகநூல்=