அனித்தா புஸ்பராசா அவர்கள் 2019ல் விஞ்ஞான பொறியிலாளராக பட்டம்!

புதன் பெப்ரவரி 27, 2019

பிரான்சு நோசிலே குரோன் தமிழ்ச்சோலை மாணவியும் நடன ஆசிரியர் தரத்தில் உள்ள செல்வி.அனித்தா புஸ்பராசா அவர்கள் 2019ல் விஞ்ஞான பொறியிலாளராக பட்டம் பெற்று தமிழினத்திற்கும் தனது தமிழ்ச்சோலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

பிரான்சு மண்ணிலே பிறந்து சிறிய வயது முதல் தமிழ்மொழி மீதும், கலைமீதும் பெற்றோர்கள் வைத்திருந்த பற்றுதல் மகள் அனித்தவையும் பற்றிக்கொண்டது என்று சொல்லலாம். தன்னுடைய பிரெஞ்சு மொழி கல்வியோடு,தாய்மொழியையும் நடனத்தையும் கற்றதோடு நின்று விடாது தமிழில் 12 ஆண்டையும், நடனத்தில் ஆற்றுகைத்தரத்தினை முடித்து அதில் தேர்ச்சி பெற்று இன்று ஆசிரியர் தரத்தில் நின்று கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது, மிருதங்கம் ( தண்ணுமை) 4 வது ஆண்டின் தரத்தில் கற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. 

பிரான்சில் விஞ்ஞான பொறியியலாளர் படிப்பு என்பது எத்தனை தடைகள் கஸ்ரங்கள் துன்பங்கள் இடர்களைச் சந்தித்தே ஆகவேண்டும். 

தமிழ்ப் பெற்றோரின் கடும் முயற்சியினாலே எம் தேசக்குழந்தைகள் சாதிக்கத் தொடங்கி விட்டார்கள் இவர்களையும் எதிர்காலத்தில் சாதனை படைக்கப்போகும் எம் தேசத்தின் சிற்பிகளை வாழ்த்துவோம் உறுதுணையாய் இருப்போம்.

இன்று எம்மை உற்றுப்பார்க்கும் இந்த உலகம் ஒருநாள் கண்திறந்து விழித்துப்பார்க்கும் என்பது உண்மை அதற்கு காரணமாக எம் தேசியத்தலைவன் காலத்தில் வரலாறு தந்த எம் பிள்ளைகளை இதயபூர்வமாக வாழ்த்துவோம்.