ஆங்கிலக் கால்வாயை நீந்தி சாதனை படைத்த பெண்!

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

பிரித்தானியாவின் கென்ட் பிராந்தியத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த வாரம் தொடர்ச்சியாக நான்கு முறை ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

37 வயதான சாரா தோமஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும் இந்த சாதனை படைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

தனது சவால் மிகுந்த பயணத்தின் முதல்கட்டத்தை 54 மணித்தியாலங்களில் கடந்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலாவது கட்ட நீச்சல் பயணத்தை அவர் மேற்கொண்டார்.

 

நீச்சல் வீராங்கனையான அவர் கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சைகளை பெற்றுள்ளார். இந்தநிலையில் தான் தற்போது நோயின் பிடியிலிருந்து மீண்டு வந்துள்ளதாகவும், இந்த சாதனையை தன்னைப் போன்ற அனைத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் அர்ப்பணிப்பதாக சாரா தெரிவித்தார்.

 

 

இந்தநிலையில் நேற்று வரை அவர் நான்கு முறை நீந்தி சுமார் 130 மைல் தூரத்தை கடந்துள்ளார். குறிப்பாக 80 மைல்களில் அவரது நீச்சல் பயணம் நிறைவடைந்திருக்க வேண்டும். எனினும் கடுமையான கடல் அலையின் தாக்கத்தால் தூரம் அதிகரித்தது.

இதன்படி, சாரா தோமஸ் நேற்று பிரித்தானிய நேரப்படி காலை 6.30 க்கு சாதனைப் பயணத்தை நிறைவு செய்தார்