அனந்தி முன்னணியுடன் இணையவில்லை!

வெள்ளி ஜூலை 19, 2019

 தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அரசியல் கூட்டு ஒன்றை உருவாக்கும்  முயற்சிகள் நடைபெற்றுவரும் நிலையில்  கூட்டுக்கான  சாத்தியப்பாடுகள் மிகக் குறைவாகவே உள்ளன.

இந்நிலையில்  அரசியல் கூட்டு ஒன்றின் அவசியத்தை உணர்ந்த வடமாகாண முன்னாள் மகளிர் விவகாரங்களுக்கான அமைச்சா் அனந்தி சசிதரன்.  தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அரசியல் கூட்டு ஒன்றை உருவாக்குதற்காக இன்று(19) மாலை    முன்னணியுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். அனந்தி சசிதரனுடன் வைத்தியர் ஒருவரும் கலந்து கொண்டார்.

இச் சந்திப்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரில் ஒருவரான சட்டத்தரணி சுகாஸ் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்   நலலூர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி வாசுகி சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச் சநதிப்பு  அரசியல் கூட்டுக்கான சாத்தியமான நிலை எதுவும் இன்றி  முடிவடைந்து.