அனுமதிப்பத்திரமின்றி தொழிலில் ஈடுபட்ட நால்வர் கைது!

செவ்வாய் செப்டம்பர் 10, 2019

மன்னார் – பேசாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (09) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 20 தொடக்கம் 34 வயதுகளையுடையவர்களென்றும், மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய இயந்திரப்படகும் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.