ஆப்கானில் புதிய பயங்கரவாத தளங்கள் உருவாகலாம்

செவ்வாய் ஓகஸ்ட் 24, 2021

ஏஎன்ஐ

தலிபானுடன் என்ன நடைபெறுகின்றது என்பதை அடிப்படையாக வைத்து ஆப்கானிஸ்தானின் தலைவிதி அமெரிக்காவிற்கு எதிர்காலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

உலகின் மிகவும் வலிமைவாய்ந்த இராணுவம் மேலும் ஆபத்தான சூழ்நிலைக்குள் சிக்கநேரிடலாம்.
 
தங்களின் அதிதீவிர தன்மைக்கும் நம்பகமற்ற தன்மைக்கும் பெயர்போன தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதால் அந்த நாடு ஆட்சிசெய்ய முடியாதநாடாகவும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் தொட்டிலாகவும் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.

நிக்கேய் ஏசியாவில் எழுதியுள்ள ஹிரோபுமி மட்சுவோ தலிபான்களின் அதிதீவிரதன்மை ஆப்கானிஸ்தானில் புதிய பயங்கரவாத தளங்களிற்கு வழிவகுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தலிபான் காபுலை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள நிலையில் அனேகநாடுகள் தங்கள் பிரஜைகளை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளிலும் தங்கள் தூதரகங்களை பகுதியளவில் மூடுவதிலும் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறான நிலைமை உருவாகலாம் என்பதை உலகின் வேறு எந்த நாட்டையும் விட சரியாக கணித்திருக்ககூடிய அமெரிக்கா 20 வருட இராணுவ சாகசத்திற்கு பின்னர் ஏன் வேகமாக தனது படையினரை விலக்கியது என்பது முக்கியமான கேள்வி

அமெரிக்கா தனது படையினரை விலக்கிக்கொண்டதின் பிரச்சினைக்குரிய விடயம் என்னவென்றால் அமெரிக்கா தலிபானின் நேர்மையையும் திறமையையும் நம்பியதே ஆகும்.

ஆப்கான் அரசாங்கத்துடன் இணைந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாமல் தலிபானுடன் அமெரிக்கா நேரடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது பிழையான விடயம் என்கின்றார்ஹிரோபுமி மட்சுவோ.

அமெரிக்கா தனது படைகளை விலக்கிக்கொண்டால்-ஆப்கான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக உறுதிமொழி வழங்கிய தலிபான் வெளிநாடுகளை தாக்குவதற்கான தளமாக ஆப்கானை பயன்படுத்துவதற்கு பயங்கரவாத அமைப்புகளிற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்திருந்தது.

அமெரிக்க படையினரால் வெளியேற்றப்பட்ட பின்னர் தலிபான் மிதவாத அமைப்பாக மாறியுள்ளது என சில ஆய்வாளர்கள் கருத்துவெளியிட்டுள்ளனர்.

எனினும் அமைதியான ஆட்சிமாற்றத்திற்காக ஆப்கான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது என்ற உறுதிமொழியிலிருந்து அவர்கள் ஏற்கனவே பின்வாங்கியுள்ளனர். காபுல் ஏற்கனவே அவர்களது கரங்களில் உள்ளது.
தலிபான் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும்- சர்வதேச பயங்கரவாதிகள் தங்களின் தளமாக ஆப்கானை பயன்படுத்தாத நிலையை உறுதி செய்யும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.

மேலும் வரலாற்றின் அடிப்படையில் பார்க்கின்றபோது 1996 முதல் 2001 வரையிலான தலிபானின் ஆட்சிக்காலத்தில் சாட்டையால் அடித்தல் அங்கங்களை துண்டித்தால் பகிரங்க மரணதண்டனை போன்றன சாதாரண விடயங்களாக காணப்பட்டன.

பெண்கள் பெருமளவிற்கு வீடுகளிற்குள் முடக்கப்பட்டார்கள் ஓரினச்சேர்க்கை இஸ்லாமிய மதத்தை நிராகரித்தல் தகாத உறவு போன்றவற்றிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

தலிபானின் ஆட்சியின் கீழ் ஆப்கான் மீண்டும குழப்பநிலைக்குள் தள்ளப்பட்டால் அதன் ஆட்சிபுரியப்படாத பகுதிகளை பயங்கரவாத அமைப்புகள் தங்களிற்கான விளைநிலமாக பயன்படுத்தலாம்.

அல்ஹைதா பலவீனப்பட்டுள்ள அதேவேளை அதன் தீவிரவாத கொள்கை ஏனைய அமைப்புகளின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.

தலிபானுடன் என்ன நடைபெறுகின்றது என்பதை அடிப்படையாக வைத்து ஆப்கானிஸ்தானின் தலைவிதி அமெரிக்காவிற்கு எதிர்காலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

உலகின் மிகவும் வலிமைவாய்ந்த இராணுவம் மேலும் ஆபத்தான சூழ்நிலைக்குள் சிக்கநேரிடலாம்.