ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் காலமானார்!!

ஞாயிறு அக்டோபர் 17, 2021

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் அகமது ஷா அகமதுஜா (வயது 78).  கடந்த 1995ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமர் பதவியை வகித்து உள்ளார்.  

தலீபான் பயங்கரவாத அமைப்புகளால் ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்படும் வரை பிரதமராக இருந்தவர்.இந்நிலையில், இந்தியாவில் வசித்து வந்த அவர் இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுடனான அட்டாரி சோதனை சாவடி வழியே ஆப்கானிஸ்தானுக்கு திரும்பினார்.இந்த நிலையில் அவர் காலமானார்.