ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டு தலம் அருகே குண்டுவெடிப்பு- 8 பேர் பலி

சனி ஓகஸ்ட் 06, 2022

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியா பிரிவினர் மத வழிபாட்டு தலம் அருகே குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியானார்கள்.

18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் அடிக்கடி குண்டுவெடிப்பு தாக்குதலை ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.