அப்பிள் நிகழ்வின் அசத்தல் அறிவிப்புகள்

புதன் செப்டம்பர் 16, 2020

அப்பிள் நிறுவனத்தின் டைம் ஃபிளைஸ் நிகழ்வில் வெளியான அசத்தல் அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.ஆப்பிள் நிறுவனத்தின் டைம் ஃபிளைஸ் நிகழ்வு பெயருக்கு ஏற்றார்போல் வேகமாக நடந்துமுடிந்தது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6, ஆப்பிள் வாட்ச் எஸ்இ, ஐபேட் 8th ஜென், மேம்பட்ட ஐபேட் ஏர், அப்பிள் ஒன் மற்றும் ஃபிட்னஸ் பிளஸ் என பல்வேறு சாதனங்கள் ற்றுமசேவை 

 ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6

 

அப்பிள் வாட்ச் சீரிஸ் 6 முக்கிய அம்சங்கள்

 

- எஸ்6 பிராசஸர்

- இரத்த காற்றோட்ட அளவை டிராக் செய்யும் வசதி

- சீரிஸ் 3 மாடலை இருமடங்கு வேகம்

- ஸ்விம் ப்ரூஃப் வசதி

- சோலோ லூப், பிரெயிடட் சோலோ லூப் மற்றும் லெதர் லின்க் ஸ்டிராப்

- புதிய வாட்ச் ஃபேஸ்கள்

- ஃபேமிலி செட்டப்

- கோல்டு, கிராஃபைட், புளூ மற்றும் பிராடக்ட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது 

- இந்திய விலை ரூ. 40,990 முதல் துவங்குகிறது

 

 ஆப்பிள் வாட்ச் எஸ்இ

 

அப்பிள் வாட்ச் எஸ்இ முக்கிய அம்சங்கள்

 

- எஸ்5 பிராசஸர்

- ஃபால் டிடெக்ஷன்

- ஃபேமிலி செட்டப்

- புதிய வாட்ச் ஃபேஸ்கள்

- ஸ்விம் ப்ரூஃப்

- வாட்ச் சீரிஸ் 3 மாடலை விட இருமடங்கு வேகம்

- புதிய பேண்ட்கள்

- இந்திய விலை ரூ. 29,990 முதல் துவங்குகிறது

 

 ஐபேட்

 

ஐபேட் 8th ஜென் முக்கிய அம்சங்கள்

 

- 10.2 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே

- ஆப்பிள் ஏ12 பயோனிக் பிராசஸர்

- 40 சதவீதம் வேகமான சிபியு

- இருமடங்கு வேகமான கிராஃபிக்ஸ்

- ஐஒஎஸ்14

- ஆப்பிள் பென்சில் வசதி

- இந்தியாவில் இதன் விலை ரூ. 29,990 முதல் துவங்குகிறது

 

 ஐபேட் ஏர்

 

ஐபேட் ஏர் முக்கிய அம்சங்கள்:

 

- 10.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே

- ஆப்பிள் ஏ14 பிராசஸர்

- 40 சதவீதம் வேகமான சிபியு

- யுஎஸ்பி டைப் சி (20 வாட் சார்ஜர்)

- வைபை 6

- 12 எம்பி பிரைமரி கேமரா

- 7 எம்பி ஃபேஸ்டைம் கேமரா

- லேண்ட்ஸ்கேப் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

- டச் ஐடி 

- 10 மணி நேர பேட்டரி

- இந்தியாவில் இதன் விலை ரூ. 54,990 முதல் துவங்குகிறது

 

புதிய சாதனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஒன் சந்தா முறை மற்றும் ஃபிட்னஸ் பிளஸ் செயலியை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை தவிர மிகமுக்கிய ஒஎஸ் அப்டேட்களை வெளியிட இருப்பதாகவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. அந்த வகையில் பல்வேறு புது அம்சங்கள் கொண்ட ஆப்பிள் ஒஎஸ் வெளியாக இருக்கிறது.