ஆறாத வடுக்களாகப் புலம்பெயர் சிறார்களின் இதயங்களில் பதிந்த தமிழின அழிப்பு – எரிமலையாகக் குமுறும் 11 வயதுச் சிறுமி!

செவ்வாய் சனவரி 07, 2020

ஆறாத வடுக்களாகப் புலம்பெயர் தமிழ்ச் சிறுவர்களின் இதயங்களில் தமிழின அழிப்பு பதிந்திருப்பதை வெளிப்படுத்தும் ஆங்கிலக் கவிதை ஒன்றைப் பிரித்தானியத் தமிழ்ச் சிறுமி ஒருவர் எழுதியுள்ளார்.

 

வன்னிப் போரின் இறுதி மாதங்களில் ஒன்றான 2009 தை மாதம் பிரித்தானியாவில் பிறந்த சாமந்தி என்ற குறித்த சிறுமியின் நெருங்கிய உறவினர்கள் போராளிகளாக இருந்தவர்கள். ஒருவர் மாவீரரும் கூட.

 

Child's Poem

 

வன்னிப் போர் தீவிரமடைந்து தமிழின அழிப்பு நடவடிக்கைகளை சிங்கள அரசு முடுக்கி விட்ட பொழுது பிரித்தானியாவின் நாடாளுமன்ற சதுக்கத்தில் ஒன்றரை மாதத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட முற்றுகைப் போராட்டத்தில் இவரது பெற்றோர் பங்குபற்றியதோடு, சில சந்தர்ப்பங்களில் கைக்குழந்தையான சிறுமியையும் அழைத்து வந்திருக்கின்றார்கள்.

 

தவிர குறித்த சிறுமி சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ தாயகம் சென்றிருந்ததோடு, கிளிநொச்சி, விசுவமடு, புதுக்குடியிருப்பு ஆகிய தமிழீழ நடைமுறை அரசின் நிர்வாக மையங்களிலும் தங்கியிருந்துள்ளார்.

 

போரின் மெய்முகம் என்று தமிழில் பொருள்படும் தலைப்புடன் ஆங்கிலத்தில் தொடங்கும் இவரது கவிதையின் முதலாவது பந்தியில், ஆயுதம் தாங்கிய காட்டுமிராண்டிகளான சிங்களப் படையினர் சூழ்ந்திருக்கப் பதற்றத்தோடு தான் அமர்ந்திருப்பதாக விபரிக்கின்றார்.

 

வேகமாக நகரும் கவிதையின் இரண்டாவது பந்தியில் சிங்களப் படை அதிகாரி ஒருவரால் சிறுமி கொல்லப்படும் காட்சி கட்டவிழ்கின்றது.

 

‘என்னால் இதை எப்பொழுதாவது சரியாக விளங்கப்படுத்த முடியுமா?
எனது நிலைக்கு இன்னும் எத்தனை பேர் தான் ஆளாகுவார்கள்?
அவர்கள் ஏன் இவ்வாறு செய்தார்கள்?
எப்படித் தான் அவர்கள் கற்றுக் கொள்ளப் போகின்றார்கள்?
ஆனால் அவர்கள் எப்பொழுதாவது கற்றுக் கொள்வார்களா?
காலம் தான் பதில் சொல்லும்’ என்ற வரிகளோடு கவிதை முடிவுறுகிறது.

 

இக் கவிதையின் உணர்வுகள் மொழிபெயர்ப்பில் தொலைந்து விடக் கூடாது என்பதற்காக அதனை அப்படியே ஆங்கிலத்தில் தருகின்றோம்:

 

'The truth of war

 

Sitting, stressed and staring,

I sit there, motionless as a statue.

Uncivilised, barbaric soliders surround me, as I wait for my fate.

They stare at me, like I am nothing.

With a look of graveness, the officer positioned the gun.

 

Fury, isolation, despair.

Despair engulfs me and fury blinds me.

The officer, happy for making me wait, gets ready.

Now my isolated body tries not to show the mixed emotions.

BANG! I am dead, mere flesh and bones, but no soul...

I was heart-broken - my life had ended...

 

Can I ever explain this properly?

How many will meet the same fate as me?

What was their reason?

How will they learn?

But will they ever learn? Only time will tell.'