அரசியல் கவந்துரையாடலும் நூல் அறிமுகமும்.

சனி மே 25, 2019

ஈழத்தமிழர் வரலாற்றில் 2009 இற்கு முன்னும் பின்னுமான அரசியல் செயல்பாடு, நிகழ்வுகள், அதன் விளைவுகளும், தமிழ் சமூக மாற்றம், தமிழ் சமூகத்தின் பங்களிப்பு, தமிழ் சமூகத்தின் அரசியல் செயற்பாடு போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் எழுதவைப்பது, தொகுப்பது என்ற அடிப்படை முயற்சியாக சில கட்டுரைகளின் தொகுப்பாக “கண்ணோட்டம்” என்ற கட்டுரை தொகுப்பு புத்தகம், நோர்வே ஈழத்தமிழர் அவை.

எதிவரும் ஞாயிற்றுக்கிழமை 26ம் திகதி மாலை 16:00 மணிக்கு தமிழர்வள ஆலோசனை மையத்தில் (TRVS) வெளியிடபட உள்ளது.

அத்துடன் புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகை தந்துள்ள செயற்பாட்டாளர்களுடன் ஒரு ஆரோக்கியமான அரசியல் கவந்துரையாடலும் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.

ஒருங்கமைப்பு
நோர்வே ஈழத்தமிழர் அவை