அரிசி தட்டுப்பாடு ஏற்படாது

வியாழன் ஜூன் 30, 2022

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 47 ஆயிரம் மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிகார தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த மாதம் மாத்திரம் 25 ஆயிரம் மெற்றிக் தொன்  அரிசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் குறித்த தொகை அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், எரிபொருள் நெருக்கடி காரணமாக அரிசி விநியோக நடவடிக்கை தடைப்பட்டுள்ளதாக  வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது