ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்திசேகரித்த பத்திரிகையாளர்களை மோசமாக சித்திரவதை செய்த தலிபான்கள்

வெள்ளி செப்டம்பர் 10, 2021

  தர்யாபியின் கீழ் முதுகு மேல் கால்கள் மற்றும் முகத்தில் சிவப்பு நிறத்தில் ஆழமான காயங்கள் காணப்படுகின்றன,நக்தியின் இடதுகைமேல்முதுகு மேல்கால்கள் மற்றும் முகம் ஆகியவற்றில் காயங்கள் காணப்படுகின்றன.

அவர்கள் மிகமோசமாக தாக்கப்பட்டனர் அவர்களால் நடக்க முடியவில்லை,துப்பாக்கிளால் தாக்கப்பட்டனர் உதைக்கப்பட்டனர்,கேபிள்களால் சவுக்கால் அடித்தார்கள்,அறைந்தார்கள் என செகன் தெரிவித்துள்ளார்.
———————
ஆப்கான் தலைநகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களை தலிபான்கள் மோசமான சித்திரவதைக்குள்ளாக்கியுள்ளனர் என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.

எடில்லட்ரோஸ் செய்தித்தாளின் இரு செய்தியாளர்களே தலிபானினால் மோசமாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவேளை செய்தி சேகரித்த என்ற இரு பத்திரிகையாளர்களையும் தலிபான்களையும் தலிபான்கள் கைதுசெய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பத்திரிகையின் ஆசிரியருடன் கைதுசெய்யப்பட்டவர்களின் சகாக்கள் பொலிஸ்நிலையம் சென்றுள்ளனர்.

அவர்கள் தங்கள் சகாக்கள் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என கேள்வி எழுப்பியுள்ளனர்.ஆனால் பொலிஸ்நிலையத்தில் வைத்து தலிபான்கள் எங்களை தாக்கினார்கள் எங்களிடமிருந்த உடமைகளை பறித்தார்கள் என பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்கள் பத்திரிகை ஆசிரியர் கடிம் கரிமி தனது கருத்தை தெரிவித்து முடிப்பதற்குள் தலிபான் உறுப்பினர் ஒருவர் அவரை தாக்கினார் என சைகான் அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.

நாங்கள் பத்திரிகையாளர்கள் என தெரிவித்த போதிலும் தலிபான்கள் உரிய கௌரவத்தை வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சிறைக்கூண்டில் சித்திரவதை

எங்கள் மூவரையும் சிறைக்கூண்டிற்குள் கொண்டு சென்றார்கள் அங்கு 15 பேர் வரையிருந்தனர்,அவர்களில் இருவர் ரொய்ட்டர் மற்றும் துருக்கியின் அனடொலு முகவர் ஆகியவற்றின் செய்தியாளர்கள் என சைகான் தெரிவித்துள்ளார்.
நாங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை இன்னொரு சிறைக்கூண்டில் ம் சித்திரவதை செய்யப்படுவதையும் அலறுவதையும் கேட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்களால் சுவர்களை மீறி அவர்களது கதறல்களை கேட்க முடிந்தது,பெண்கள் வலியால் அழுவதை கூட கேட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் வெளியிட்ட படங்கள் இருவரும் மோசமான கசையடிக்கு உள்ளாகியுள்ளதை காண்பித்துள்ளன.
தர்யாபியின் கீழ் முதுகு மேல் கால்கள் மற்றும் முகத்தில் சிவப்பு நிறத்தில் ஆழமான காயங்கள் காணப்படுகின்றன,நக்தியின் இடதுகைமேல்முதுகு மேல்கால்கள் மற்றும் முகம் ஆகியவற்றில் காயங்கள் காணப்படுகின்றன.

அவர்கள் மிகமோசமாக தாக்கப்பட்டனர் அவர்களால் நடக்க முடியவில்லை,துப்பாக்கிளால் தாக்கப்பட்டனர் உதைக்கப்பட்டனர்,கேபிள்களால் சவுக்கால் அடித்தார்கள்,அறைந்தார்கள் என செகன் தெரிவித்துள்ளார்.
சித்திரவதைகள் மிக மோசமானவையாக காணப்பட்டன, அதன் காரணமாக நக்டி டர்யாபி இருவரும் சுயநினைவை இழந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆண் ஒருவரை தலிபான்கள் கொண்டுசெல்வதை பார்த்தோம் அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் போல தோன்றியது என அவர் தெரிவித்துள்ளார்.

அவரால் நடக்க முடியவில்லை சிறையில் இருந்த ஏனையவர்களே உதவினார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கடும் எச்சரிக்கை

பல மணிநேரம் தடுத்துவைத்திருந்த பின்னர் தலிபான்கள் ஐந்து பேரையும் விடுதலை செய்துள்ள போதிலும் விடுதலை செய்வதற்கு முன்னர் கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்வது சட்டவிரோதம்,இது குறித்து செய்தி சேகரிப்பதன் மூலம் நீங்கள் சட்டங்களை மீறுகின்றீர்கள் இம்முறை உங்களை விடுதலை செய்கின்றோம் அடுத்தமுறை சுலபமாக தப்பமுடியாது என தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.