ஆற்றில் அடித்து செல்லப்படும் பள்ளி கட்டிடம்

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

பீகார் மாநிலம் கத்திஹார் என்ற இடத்தில் கங்கை நதியின் வெள்ளத்தில் பள்ளிக் கட்டிடம் ஒன்று அடித்துச் செல்லப்படும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பருவமழை தீவிரமானதை தொடர்ந்து கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலம் கத்திஹார் பகுதியில் கங்கை நதிக்கரையின் ஓரத்தில் ஒரு பள்ளி கட்டிடம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

வெள்ளத்தில் கட்டிடம் அடித்துச் செல்லப்படும்போது, பலர் ஆபத்தை உணராமல் அதன் அருகில் நின்று செல்போன்களில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ பதிவு சமுக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.