அருவி உச்சியில் இருந்து விழுந்து 6 யானைகள் பலி!

திங்கள் அக்டோபர் 07, 2019

தாய்லாந்தில் வடகிழக்குப் பகுதியில் அருவி உச்சியில் இருந்து கீழே விழுந்து 6 யானைகள் பலியாகின. யானைகள் பிளிறல் சத்தம் கேட்டு வந்த வனக் காவலர்கள் இரு யானைகளை நீண்ட போராட்டத்துக்குப்பின் மீட்டனர்.

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் 'காவோ யா' தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த வனச் சரணாலயத்தை தாய்லாந்து வனத்துறை மற்றும் வனவிலங்கு காப்பகம் பராமரித்து வருகிறது.

இந்த வனத்துக்குள் 'ஹாய் நரோக்'(ஹெல் அபிஸ்) எனும் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

இந்த வனவிலங்கு காப்பகத்தில் ஏராளமான யானைகள் இருக்கின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியில் இருந்து அந்த அருவி அமைந்திருக்கும் பகுதியில் இருந்து யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டது. இந்த பிளிறல் சத்தத்தைக் நீண்ட நேரத்துக்குப்பின் கேட்ட வனப் பாதுகாவலர்கள் அந்த இடத்தை நோக்கி சென்றனர்.