அறவழியிலும் உயிர் ஈகம் செய்ய முடியுமெனக் காட்டியவர் அன்னை பூபதி - பழ.நெடுமாறன்!

ஞாயிறு ஏப்ரல் 19, 2020

அறவழியிலும் உயிர் ஈகம் செய்ய முடியும் என்று காட்டியவர் அன்னை பூபதி என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

தனது கணவன், பிள்ளைகளைத் துறந்து பட்டினிப் போர் புரிந்த அன்னை பூபதியின் ஈகம் சாதாரணமானது அல்ல என்றும் அன்னை பூபதி நினைவாக வெளியிட்டுள்ள செய்தியில் பழ.நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.