ஆஸ்திரேலியா விசா கொண்டிருப்பவர்களின் பயணத் திட்டங்களை சீர்குலைத்த ஓமிக்ரோன் கொரோனா

ஞாயிறு டிசம்பர் 05, 2021

கொரோனா பெருந்தொற்று காலத்தில் எல்லைகளை மூடுவது என்பது புதிதான ஒன்றல்ல. இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்த நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் எளிதாக்கும் ஆஸ்திரேலியாவின் திட்டத்திற்கு ஓமிக்ரோன் கொரோனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. 

முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் கொரோனா, ஆஸ்திரேலியாவின் சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் ஆகிய பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. 

இதனால், வெளிநாட்டு மாணவர்கள் உள்ளிட்ட ஆஸ்திரேலிய விசா கொண்டிருப்பவர்கள்

டிசம்பர் 1ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையலாம் எனும் முடிவை ஆஸ்திரேலிய அரசு மேலும் 15 நாட்கள் தள்ளிப் போட்டுள்ளது. 

சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, திறன்வாய்ந்த குடியேறிகள், வெளிநாட்டு மாணவர்கள், மனிதாபிமான விசா கொண்டிருப்பவர்கள், working holiday, provisional family விசா கொண்டிருப்பவர்கள் அனுமதிக்கப்பட இருந்த நிலையில், ஓமிக்ரோன் கொரோனா ஆஸ்திரேலிய அரசின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திறன் வாய்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் திரும்புவது ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமானதாகும் என முன்பு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் பேசியிருந்தார். அதன்படி, சுமார் 2 லட்சம் குடியேறிகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்குள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்தது.