ஆடை குறித்த புதிய சுற்றுநிரூபத்தை வௌியிட அமைச்சரவை அனுமதி

புதன் ஜூன் 26, 2019

அரச உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பிலான புதிய சுற்றுநிரூபத்தை வௌியிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இந்த அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய சுற்றுநிரூபத்துக்கு அமைய அரச சேவையிலுள்ள பெண்கள் புடவை, ஒசரி தவிர்ந்த வேறு ஆடைகளை அணிவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதுடன், முகத்தை மறைக்காதவாறு ஆடை அணிய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் காலங்களில் அரச உத்தியோகத்தர்கள் அணியும் ஆடை தொடர்பிலான புதிய சுற்றுநிரூபத்தை வௌியிடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.