ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கவேண்டாம்

திங்கள் ஜூன் 29, 2020

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை வேட்பாளர்கள் கைவிடவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே வேண்டுகோள் விடுத்துள்ளது. 

ஆதாரமற்ற சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை வேட்பாளர்கள் நிறுத்தவேண்டும் என கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.

தேர்தலை மையமாக வைத்து பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன இவை மக்களை தவறாக வழிநடத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் இனவாதத்தை தூண்டக்கூடியவை என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வேட்பாளர்களை இவ்வாறு ஆராயப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.