அதி அபாய வலயங்களில் வாழும் மக்களுக்கு வீடுகளுக்கே பொருட்கள்

புதன் மார்ச் 25, 2020

கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயமுள்ள வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு வீடுகளுக்கே பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யுமாறு மொத்த விற்பனை நிலையங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

அத்தியாவசிய உணவுப்பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்யும் திட்டத்தை செயற்றிறனுடன் முன்னெடுப்பதற்காக பசில் ராஜபக்ஸவின் தலைமையில் செயலணி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

அமைச்சுகளின் செயலாளர்கள் , மாவட்ட அரசாங்க அதிபர்கள் , பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் இந்த செயலணியின் ஏனைய உறுப்பினர்களாவர்.