அதி­க­ரிக்­குமாம் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான செலவு!

திங்கள் அக்டோபர் 21, 2019

பிளாஸ்ரிக் வாக்­குப்­பெட்­டி­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு ஆராய்ந்து வரு­வதால்,  ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான செல­வினம் மேலும் அதி­க­ரிக்கும் என்று தேர்தல் ஆணைக்­குழு வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான மொத்த செல­வி­னங்­களை தேர்தல் ஆணைக்­குழு இன்னும் இறுதி செய்­ய­வில்லை என்று, தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் ஆணை­யாளர் சமன் ஸ்ரீ ரத்­நா­யக்க தெரி­வித்தார். ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான மொத்த செல­வினம், சுமார் 4 தொடக்கம் 4.5 பில்­லியன் ரூபா வரை இருக்கும் என்று ஆணைக்­குழு ஆரம்ப மதிப்­பீ­டு­களை செய்­தி­ருந்­தது.

எனினும் தற்­போது தேர்தல் ஆணைக்­குழு 7 பில்­லியன் ரூபாவை ஒதுக்­கு­மாறு திறை­சே­ரி­யிடம் கோரி­யுள்­ளது. 35 வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டு­வதால் தேர்­த­லுக்­கான செலவு அதி­க­ரிக்கும் என்று அதி­கா­ரிகள் எதிர்­பார்க்­கின்­றனர்.

பிளாஸ்ரிக் வாக்குப் பெட்­டி­க­ளுக்கு செல்ல வேண்­டுமா, வேண்­டாமா என்று ஆணைக்­குழு இன்னும் முடிவு செய்­ய­வில்லை.  பிளாஸ்ரிக் வாக்குப் பெட்­டி­க­ளுக்கு செல்ல முடிவு செய்தால் தேர்­த­லுக்­கான செலவு மேலும் அதி­க­ரிக்கும் என்றும் அவர் தெரி­வித்தார். அதே­வேளை, வாக்­குச்­சீட்­டு­களை அச்­சி­டு­வ­தற்­கான மொத்த செலவு இன்னும் கணக்­கி­டப்­ப­ட­வில்லை என்றும், அரச அச்­சக திணைக்­கள தலைவர் கங்­கானி லிய­னகே கூறினார்.

காகித செலவு அதி­க­ரித்­துள்­ளது. அச்­சிடும் நேரம் அதி­க­ரிக்கும். இதன் விளை­வாக செலவும் அதி­க­ரிக்கும் என்றும்,  எனினும், நவம்பர் 6ஆம் திகதிக்குள் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணியை முடிக்க திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.