அதிக அளவில் டெங்கு நோயாளர்கள்!!

புதன் டிசம்பர் 08, 2021

மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக வடக்கில் ஓமிக்ரோன் திரிவுடையவர்கள் உள்ளார்களா என்பதை கண்டறிய பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு சிறீ ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

இன்று மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பனங்கட்டுகொட்டு,பெரிய கடை,சின்னக்கடை,மூர்வீதி,மற்றும் பேசாலை பகுதிகளில் அதிக அளவில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.