அதிகாலையில் தேனில் ஊறிய பூண்டினை வெறும் வயிற்றில் சாப்பிடவும்

ஞாயிறு ஜூன் 02, 2019

நாம் சாப்பிடும் உணவில் தான் உடல் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது. அதோ நம் உடலில் ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளை நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளிலிருந்தே தவிர்க்க முடியும். தினமும் காலையில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் உடலுக்கு நன்மைகள் ஏற்படும்.

ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்துகிற பொருட்களைக் கொண்டே மருத்துவம் பார்க்கப்பட்டது. அப்போதிருந்தே பூண்டு மற்றும் தேன் இரண்டையும் மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுத்தி வந்தனர்.

தயாரிப்பு முறை உங்களுக்கு தேவையான அளவு பூண்டு எடுத்து நன்றாக தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். கண்ணாடி பாட்டிலில் அதனைப் போட்டு பூண்டு மூழுகும் அளவுக்கு தேன் ஊற்ற வேண்டும்.

குறைந்தது ஒரு நாள் முழுவதுமாவது பூண்டு தேனில் ஊறவேண்டும். இதற்கு கெமிக்கல் கலப்படமில்லாத தூய தேன் வாங்குவது சிறந்தது.

வைரஸ் காய்ச்சல் பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும். பூண்டு இன்ஸுலின் சுரப்பை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி பூண்டில் "அலிசின்" என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டு முதன்மையானது. அதைத் தவிர அஜீரணம், வாயுத்தொல்லை, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் நீக்க பெரிதும் உதவுகிறது.