அதிகரிக்கப்படுகிறது முச்சக்கரவண்டி கட்டணம்!

புதன் ஜூன் 12, 2019

பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சுய வேலைவாய்ப்பு நிபுணர்களின் தேசிய முச்சக்கர வண்டி சம்மேளனம் அறிவித்துள்ளது.

அதன்படி முச்சக்கரவண்டி கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டென் 92 வகை பெற்றோல் ஒரு லீற்றரின் விலை, 3 ரூபாயினால் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாயாக இதுவரையிலும் இருந்தது. அது 60 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது என, அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.