அதிகரிக்கப்படுமா போக்குவரத்து கட்டணம்?

செவ்வாய் பெப்ரவரி 12, 2019

பேருந்து , முச்சக்கர வண்டி உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது இல்லையென நிதியமைச்சு அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

எனினும் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதற்கு அமைய போக்குவரத்து கட்டணங்களை திருத்துவது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என பேருந்து  மற்றும் முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.