அதிகரித்த கொரோனா! கடந்த 24 மணி நேரத்தில் 1,658 பேருக்கு தொற்று-

புதன் செப்டம்பர் 15, 2021

சென்னை- தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று 1,591 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 1,658 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,50,740 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 1,658ஆக உள்ளது. 

சென்னையில் நேற்று 212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 226 ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனாவால் இன்று 29 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,246 ஆக உயர்ந்திருக்கிறது.

மேலும் அரசு மருத்துவமனைகளில் 23 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் ஒருவர்.

தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,636ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,542 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,86,786 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.