அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார்!!

திங்கள் ஜூன் 27, 2022

அதிமுக ஆலோசனை கூட்டம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் 75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர். மேலும் 4 நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர இயலாது என கடிதம் கொடுத்துள்ளனர்.

அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார். துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.