அடிவருடிகளின் பேச்சைக் கேட்டு தமிழருக்கான தீர்வு இதுதான் என்பதை முடிவு செய்யலாமா?

புதன் ஜூன் 12, 2019

முற்று முழுதான வடகிழக்கு இணைந்த சகல மட்ட அதிகாரப்பரவலே எமது தேவை.13வது திருத்தச் சட்டமல்ல என முன்னாள் முதலமைச்சர் நீதியரசர்.
க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13வது அரசியல் திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரப் பகிர்வு வடக்குக்குப்போதும் என்று எமது நாட்டின் ஜனாதிபதி இந்திய ஊடகவியலாளர்களிடம் அண்மையில் கூறியுள்ளார்.அது பற்றி உஙகள்; கருத்து என்ன என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் அதைத் தீர்மானிப்பது அவர் அல்ல. எமது மக்களே! அவரைப் பதவிக்குக் கொண்டுவர நாங்கள் 2014ல் 2015ல் பாடுபட்டது அவர் எங்களுடன் சேர்ந்து பேசி எமது அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தருவார் என்று தான். எம்முடன் பேசித்தான் இந்த முடிவை எடுத்தாரா அல்லது அடிவருடிகளின் பேச்சைக் கேட்டு இவ்வாறு கூறியுள்ளாரா?