அத்திவரதரை தரிசிக்க அனுமதி கேட்டு நளினி !

வெள்ளி ஓகஸ்ட் 16, 2019

காஞ்சிபுரத்தில் 46 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுவதையடுத்து, அத்திவரதரை தரிசிக்க அனுமதி கேட்டு நளினி எஸ்.பி.யிடம் மனு அளித்தார்.

 நளினி, முருகன் மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதற்காக நளினி கடந்த 25-ந்திகதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நிபந்தனைகளுடன் பரோலில் வந்தார். தற்போது வேலூர் சத்துவாச்சாரி புலவர் நகரில் திராவிட இயக்க தமிழர் பேரவை பிரமுகர் வீட்டில் தங்கியுள்ளார்.

இவர் சிறைத்துறை விதிமுறைகளின்படி சத்துவாச்சாரி காவல் துறை  நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். காவல் துறை அனுமதியில்லாமல் அவர் வெளியில் எங்கும் செல்லக்கூடாது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க அனுமதி கேட்டு நளினி எஸ்.பி. பிரவேஷ்குமாரிடம் மனு அளித்தார்.

 

அத்தி வரதர்


அத்திவரதர் தரிசனம் இன்று கடைசி நாளாகும். மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதி கேட்ட நளினியின் கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.