அத்துளுகம தாக்குதல்: சந்தேக நபர் கைது

வெள்ளி செப்டம்பர் 18, 2020

 பண்டாரகம அத்துளுகமவில் காவல் துறை  குழுவினர் மீது தாக்குதல் மேற்கொண்ட கொட்டுகொலயா என அறியப்படும் 50 வயதுடைய அப்துல் ஷெரீப் மொஹமட் ரிபாய் இன்று காலை பண்டாரவளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறையினர்  மீது தாக்கியமை, கஞ்சா கடத்தியமை போன்ற குற்றங்களுக்காக குறித்த நபர் தேடப்படடு வந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர் .

கடந்த செப்டெம்பர் 9ஆம் திகதி அத்துளுகம பிரதேசத்தில் பண்டாரகம காவல் துறையினர் மேற்கொண்ட கஞ்சா போதைப்பொருள் சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களைக் கைது செய்ய முற்பட்ட போது காவல் துறையினர் பிரதேச வாசிகள் குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

சந்தேக நபரான மொஹமட் ரிபாய் பிரதேசவாசிகளின்  தாக்குல்களின் மத்தியில் பொலிஸ் காவலிலிருந்து தப்பியிருந்தார். அத்துளுகம மற்றும் கல்தொட்ட ஆகிய இரு வெவ்வேறு தாக்குதல் சந்தர்ப்பங்களில் இரு பெண்கள் உட்பட 9 சந்தேக  நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேற்படி தாக்குதலின் போது இரு உதவி பொலிஸ் பரிசோதகர்கள், இரு பெண் காவல் துறையினர் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். மேலும் கைதான பிரதான சந்தேக நபர் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.