அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த தமிழக மீனவர்கள் கைது!

வியாழன் அக்டோபர் 10, 2019

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டுவந்த 07 இந்திய மீனவர்களை நேற்று (09) நள்ளிரவு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இவர்களை இன்று (10) யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்தனர்.

குறித்த நபர்கள் இரண்டு விசைப்படகுகளில் மூலம் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுப்பட்டதுடன் அவர் கடற்தொழில்சார்ந்த உபகரணங்கள் என்பன அரச உடமையாக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், தங்கச்சி மல்லிகைப்பட்டணம் மடம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.இவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவு பிறப்பித்தார்.