அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டுள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதிகள்

செவ்வாய் டிசம்பர் 03, 2019

அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டுள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதிகள்: இலங்கை அகதி சொல்வது என்ன? 

பப்பு நியூ கினியா: மனுஸ்தீவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட அகதிகள், பப்பு நியூ கினியாவின் தலைநகரான ஃபோர்ட் மோர்ஸ்பேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  கடந்த ஆகஸ்ட் மாதம் மனுஸ்தீவிலிருந்த முகாம் மூடப்பட்ட நிலையில், அகதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. 

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த 250க்கும் அதிகமான அகதிகள் பப்பு நியூ கினியாவில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்களில் 46 பேர் புதிதாக கட்டப்பட்டுள்ள Bomana தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ள சூழலில், மற்ற அனைவரும் அடுக்கமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  

“இந்த பகுதி பாதுகாப்பனது இல்லை என பலர் சொல்கிறார்கள். நாங்கள் வெளியில் செல்லும் போது பணம், செல்போன்களை எடுத்து செல்ல வேண்டாம் என்கிறார்கள்,” எனக் கூறுகிறார் இலங்கைத் தமிழ் அகதியான சமிந்த கணபதி. 

அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கான வாடகையை ஆஸ்திரேலிய அரசு செலுத்தி வருகின்றது. அதே சமயம், இதர செலவுகளுக்கான உதவி போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகின்றது. 

இங்கு வைக்கப்பட்டுள்ள பல அகதிகள் எதிர்க்காலம் குறித்த கவலையில் உள்ள சூழலில், பாதுகாப்பான நாட்டில் மீள்குடிமர்த்தமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.