ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 8 பேர் யாழில் கைது!

திங்கள் ஏப்ரல் 15, 2019

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் 8 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

மானிப்பாய் , உடுவில் பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை மானிப்பாய் காவல் துறையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

அதன் போது கடந்த காலங்களில் மானிப்பாய் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் , 8 பேரை மானிப்பாய்காவல் துறையினர் கைது செய்தனர். 

கைதுசெய்யப்பட்டவர்களை மானிப்பாய் காவல் துறையினர் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.