அவசரகால சட்டம் நீக்கம்

சனி மே 21, 2022

 இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம் நேற்றிரவு முதல் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 6ம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் அவசரகால சட்டம் நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், நாடாளுமன்றத்தில் இதை நிறைவேற்ற முடியாமையினால், அது 14 நாட்களில் ரத்து செய்யப்படும் என பேராசிரியர் பிரதீபா மஹானாமஹேவா தெரிவிக்கின்றார்.