அவன் வருவான்!

புதன் நவம்பர் 27, 2019

நான்
அவனையே
பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

அவனும்
என்னையே
சிரித்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறான்.

நான்கைந்து பூக்களை
அவனுக்கு கொடுக்கவா? விடவா?

ஒரு சுடரேற்றி
அவனை ஒளிர்விக்கவா? வேண்டாமா?

உண்மையில்
அவன் இருக்கிறானா? இல்லையா?

தயவு செய்து
அவன் வருவானென்று சொல்லுங்கள்.

- தீபிகா-
27.11.2019
02.26 am.