ஆவணங்களின்றி வேலைச்செய்யும் வெளிநாட்டினரை சட்டப்பூர்வமாக்க மலேசியா புதிய திட்டம்

திங்கள் நவம்பர் 23, 2020

 மலேசியாவில் முறையான ஆவணங்களின்றி பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கலை சட்டப்பூர்வ தொழிலாளர்களை மாற்ற மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சம்பந்தபட்ட நிறுவனங்கள் வழியாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. 

அதே சமயம், இது தொடர்பான மேலதிக விவரங்களை மலேசிய அரசு வெளியிடும் வரையில் இத்திட்டத்திற்காக எவருக்கும் எந்த பணத்தையும் செலுத்த வேண்டும் என புலம்பெயர் வெளிநாட்டுத் தொழிலாளர்களை மனித உரிமை அமைப்பு ஒன்று அறிவுறுத்தியுள்ளது. 

உற்பத்தி, கட்டுமானம், விவசாயம், தோட்டத் தொழில் ஆகியவற்றில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என மலேசிய தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தில் ஆர்வமுள்ள நிறுவனங்கள் நவம்பர் 16யிலிருந்து மின்னஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என மலேசிய குடிவரவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சுமார் 6 மாதக்காலம் நடைமுறையில் வைத்திருக்க மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது.