அவரை வீட்டிற்கு அனுப்புதல்!

* ‘இடைக்கால அரசு’என்பது ஊரடங்குச் சட்டத்தை பொருட்படுத்தாமல் வீதிக்கு இறங்கிய மக்களின் ஆக்ரோஷத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான ’ நாடகமே தவிர வேறொன்றுமில்லை.
*மார்கோஸ் அதிககளவுக்கு வெளிநாட்டு கடன்களை வாங்வதில் பிரியமான ராகவும் இருந்தார். ராஜபக்ச காலத்தில் நாம் இங்கு பார்த்தது போலவே அவரது பதவிக்காலத்தில் நிகரதேசிய உற்பத்தியின் உயர் வீதத்தை கொண்டதாகவிருந்தது . மார்கோஸின் பதவிக்காலம் பிலிப்பைன்ஸின் அபிவிருத்தியின் பொற்காலமாக சித்தரிக்கப்படும் அதே வேளைமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த வளர்ச்சி உயர்ந்ததாக இருந்தது .
*மார்கோஸ் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சில தொழில்துறைகளில் ஏகபோக உரிமையை கொண்டிருக்க அனுமதித்தார். தேசத்தின் ‘பொ க்கெட்டு’களை கொள்ளையடிப்பதற்கான பிரத்யேக வாய்ப்புகளை உருவாக்கி, அவரது கூட்டாளிகளுக்கு வரி சலுகைகள் வழங்கப்பட்டன. (கடந்த இரண்டு வருடங்களில் இங்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகளை நினைவில் கொள்க)
*மனித உரிமைகளை நசுக்குவதும் ஊடகங்களை மௌனமாக்குவதும் மார்கோஸின் ஆட்சியின்ஏனைய அம்சங்க களாகும். அவரது ஆட்சி ஒரு பொருளாதாரத்தின் ‘படி முறையான கொள்ளை’ என்று குறிப்பிடப்படுகிறது, இது கடும் வறுமை மற்றும் இறுதியில் கடன் நெருக்கடிக்கு வழிவகுத்தது .
00000000000
இதை நீங்கள் படிக்கும் நேரத்தில், ‘இடைக்கால அரசு’ என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது .குடும்ப ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சி என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதேவேளை, எதிர்பார்ப்பாட்டக்காரர்களை ஊக்கமிழ க்க செய் வதற்கான விரக்தியான முயற்சியாக ஜனாதிபதி ‘அவசரகால’ நிலைமையையும் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தையும் பிரகடனப்படுத்தியுள்ளார். ‘இடைக்கால அரசு’ என்ற நாடகம் என்பது ஊரடங்கு உத்தரவின்போது வீதியில் இறங்கிய மக்களின் ஆக்ரோஷத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான மற்றொரு நீட்சியே தவிர வேறில்லை.
இதற்கிடையில், ஆளும் குடும்பத்தின் நண்பரும் அமெரிக்காவிற்கான முன்னாள் தூதுவருமான ஜாலிய விக்ரமசூரிய,நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கொலம்பியாவின் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வெற்றிகரமான வழக்கைத் தொடர்ந்து தண்டிக்கப்பட உள்ளார். 2013 ஆம் ஆண்டு வாஷிங்டன், டி.சி.யில் ஒரு புதிய தூதரகக் கட்டிடத்தை வாங்குவது சம்பந்தப்பட்டது. குடும்பத்துடன் தொடர்புடைய அனைத்து திருடர்கள் மற்றும் கொலைகாரர்கள் இங்குசுதந்திரமாக செல்வதைக் காணும் அதே வேளையில், குடும்பத்தின் குறைந்தபட்சம் ஒருவரையாவது சிக்க வைப்பதற்காக அமெரிக்க நீதிமன்றங்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எனவே, ‘கோ ஹோம் ’ என்பதற்குச் சிறந்த அர்த்தம் இருக்க வேண்டும். இதனால்தான் சில எதிர்ப்பாளர்கள் ஏற்கனவே “ஜெயிலுக்குச் செல்லுங்கள்- வீட்டிற்கு அல்ல” என்ற வார்த்தையை கண்டுபிடித்துள்ளனர்.
சில தசாப்தங்களுக்கு முன்பு, இதேபோன்ற சூழ்நிலையில், பிலிப்பைன்ஸ் மக்கள் பேர்டி டின ண்ட் மார்கோஸ் வீட்டிற்கு செல்ல வேண்டுமென விரும்பினர். மார்கோஸ் அவசரகாலச் சட்டங்களின் பெரியவிருப்பம்கொண்டவராகவும் இருந்தார். 1972 இல்செப்டம்பரில் , மார்கோஸ் இராணுவச் சட்டத்தை அறிவித்தார், இது பிலிப்பைன்ஸின் மக்களுக்கு சாதாரண சட்ட உரிமைகளுக்கான பாதுகாப்பை இழக்கச்செய்தது . மார்கோஸின் ஆட்சி படிப்படியாக முழுமையான அதிகாரத்தைப் பெற்று, ஊழலுக்குச் சாதகமான சூழலை அமைத்து, சட்டரீதியான பின்விளைவுகள் எதுவும் இல்லாமல் இருந்தது.
மார்கோஸ் அதிக வெளிநாட்டு கடன் வாங்குவதில்பிரியமானவராக இருந்தார். ராஜபக்ச காலத்தில் நாம் இங்கு பார்த்தது போலவே அவரது பதவிக்காலம்நிகரதேசிய உற்பத்தியின் உயர் வீதத்துடன் இருந்தது மார்கோஸின் பதவிக்காலம் பிலிப்பைன்ஸின் அபிவிருத்தியின் பொற்காலமாக சித்தரிக்கப்பட்ட அதே வேளையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இந்த வளர்ச்சி உன்னதமானது. இந்த கடன் உந்துதல் அபிவிருத்தி இறுதியில் மோசமான மந்தநிலைக்கு இட்டுச் சென்றது, எதிர்காலத்தலைமுறைகளுக்கு சுமையாக இருந்தது. இங்கே, இப்போது எ மக்கும் அதேதான் நடந்திருக்கிறது.
மார்கோஸ் குடும்பமும் ஊழலுக்குப் பெயர் போனது. இ லஞ்சம் மற்றும் ஊழலின் பாரம்பரிய வழிகளில் நிபுணத்துவம் பெற்றதற்குஅப்பால் , மார்கோஸ் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சில தொழில்களில் ஏகபோக உரிமையை அனுமதித்தார். தேசத்தின் பொ க்கெட்டுகளை கொள்ளையடிப்பதற்கான பிரத்யேக வாய்ப்புகளை உருவாக்கி, அவரது கூட்டாளிகளுக்கு வரி சலுகைகள் வழங்கப்பட்டன. (கடந்த இரண்டு வருடங்களில் இங்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகளை நினைவில் கொள்க).
மனித உரிமைகளை நசுக்குவதும் ஊடகங்களை மௌனமாக்குவதும் மார்கோஸின் ஆட்சியின் ஏனைய அம்சங்க ளாகும். அவரது ஆட்சி ஒரு பொருளாதாரத்தின் ‘முறையான கொள்ளை’ என்று குறிப்பிடப்படுகிறது, இது கடுமையான வறுமை மற்றும் இறுதியில் கடன் நெருக்கடிக்கு வழிவகுக்கிறது. சில ஆய்வாளர்கள் இது ஒரு அரசாங்கத்தின் மிகப்பெரிய கொள்ளை என்று குறிப்பிடுகின்றனர், இது 5 பில்லியன் டொலர் முதல் 10 பில்லியன்டொலர் வரையாகும்.. அவர்களின் செயற் பாடுகள் குறித்து சரியான விசாரணை நடத்தினால், எங்கள் ‘குடும்பம்’ மட்டுமே இந்த உலக சாதனையை முறியடிக்க முடியும்.
இறுதியில், 1986 இல், பிலிப்பைன்ஸ் மக்கள் அவரை ‘வீட்டிற்குச் செல்லுங்கள்’ என்று கேட்டபோது , அவர்கள் ஹவாய்க்குத் தப்பிசென்றனர் . ஆனால், பிலிப்பைன்ஸ் மக்களுக்கு இது மிகவும் தாமதமானதாகும் . வீட்டுக்குப் போ என்று சொல்லத் தொடங்குவதற்குள் எங்களுக்கும் தாமதமாகிவிட்டது. எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சாரத்தை இழக்கும் வரை எங்கள் நடுத்தர வர்க்கம் ஒருபோதும் தெருவில் இறங்கவில்லை. (அவர்களை அமைதிப்படுத்த, நீங்கள் அவர்களுக்கு மீண்டும் எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சாரம் கொடுக்க வேண்டும்.)
எனவே நாம் இப்போது என்ன செய்ய முடியும்? திருடப்பட்ட பொருட்களுடன் ஒரு திருடன் பிடிபட்டால், நீங்கள் அவரை ‘வீட்டுக்கு போ’ என்று வெறுமனே சொல்ல மாட்டீர்கள். குறைந்தபட்சம் உங்கள் வீட்டில் இருந்து திருடப்பட்ட பொருட்களையாவது கைப்பற்றுங்கள், சட்ட நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்கட்டும். இல்லையெனில், கொள்ளையடித்தவர் திருடப்பட்ட எல்லா பொருட்களையும் கொண்டு ‘வீட்டுக்குச் சென்று’ தனது வாழ்க்கையை வேறு இடத்தில் அனுபவிப்பதில் மகிழ்ச்சி அடைவார் .
குறிப்பாக அரசியல் தலைவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட ஊழல் தொடர்பான விவகாரம் எளிதான இலக்கு அல்ல. மார்கோஸ் வழக்கில், பிலிப்பைன்ஸிலிருந்து திருடப்பட்ட சொத்துக்களை மீட்கும் முயற்சியில் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் (யூ என் ஓ டி சி ) மற்றும் உலக வங்கி ஆகியவை ஈடுபட்டுள்ளன. “திருடப்பட்ட சொத்துக்களுக்கு பாதுகாப்பான புகலிடம் இருக்காது” என்று ஊழல் தலைவர்களை எச்சரிப்பதை நோக்கமாகக் கொண்டது அவர்களின் திருடப்பட்ட சொத்து மீட்பு முயற்சியாகும் . இந்தத் திட்டம் திருடப்பட்ட சொத்துக்களை மீட்டு, சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவதில் ஈடுபட்டுள்ளது.
குற்றச் செயல்கள், ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் சம்பாதித்த எல்லை தாண்டிய சொத்துக்கள் ஆண்டுக்கு 1 டிரில்லியன் டொலர் முதல் 1.6 டிரில்லியன் டொலர் வரை இருக்கும் என்று அவர்கள் மதிப்பிடுகின்றனர். பிலிப்பைன்ஸைத் தவிர, இந்த முயற்சி நைஜீரியா மற்றும் பெருவில் திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதில் தலையிட்டது, மேலும் அவர்களின் ஊழல் அரசியல்வாதிகளால் திருடப்பட்ட சொத்துக்களை அந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதில் ஓரளவு வெற்றி அடைந்துள்ளது. சொத்து மீட்புக் கான சர்வதேச மன்றம் என்பது அத்தகைய நாடுகளுக்கு நிதி மையங்களுடன் அத்தகைய சொத்துக்களை மீட்டெடுப்பதற்கும் திரும்பப் பெறுவதற்கும் தேவையான ஒத்துழைப்பைப் பெறுவதற்கு உதவும் ஒரு இணைக்கப்பட்ட அமைப்பாகும்.
ஊழலுக்கு எதிரான ஐ.நா. சாசனம் 2005 இல்உள்ளீர்த்து க்கொள்ளப்பட்டது, மேலும் அதில் பிரத்தியேகமாக சொத்து மீட்பு பற்றிய ஒரு அத்தியாயம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு, இலங்கையில் இருந்து திருடப்பட்ட சொத்துக்களை விசாரணை செய்து, கண்டறிந்து, பறிமுதல் செய்து, இலங்கைக்கு மாற்றும் நோக்கத்துடன், அரச சொத்துக்களை மீட்பதற்கான விசேட ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டது. இந்தசெயலணிக் குழு திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்கான வரைவு சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது, ஆனால் வெளிப்படையான காரணங்களுக்காக அது ஒரு சட்டமாக நடைமுறைக்கு வரவில்லை. திருடப்பட்ட இ லட்சக்கணக்கான கோடிகளை மீட்க நினைப்பவர்கள் சிந்திக்க வேண்டிய வரிகள்.
இறுதியாக, போதுமான எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகியவற்றைப் பெறும்போது, நாம் மீண்டும் அதே சிறந்த பழைய ஊழல் வட்டத்திற்குச் செல்வதானால் , அது மக்களின் தவறு. உங்கள் வயிற்றை நிரப்ப ஏதாவது கிடைத்தால், மீண்டும் ‘நாட்டைக் காப்பாற்ற வேண்டும்’ என்று நினைக்கிறீர்கள். அவ்வாறானால் , ஊழல் அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்வதில் அர்த்தமில்லை.
டெய்லி மிரர்
link-dailymirror
Sending him Home: Lessons from Marcos