அவுஸ்ரேலிய பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி முன்னிலை

ஞாயிறு மே 19, 2019

அவுஸ்ரேலிய பொதுத்தேர்தலில் லிபரல் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய பொதுத்தேர்தல் (சனிக்கிழமை) காலை ஆரம்பமாகியிருந்த நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இந்த முதல் கட்ட முடிவுகளுக்கு அமைய தொழிற்கட்சி முன்னிலை வெற்றிருந்ததாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையிலேயே தற்போது வெளியாகி வரும் முடிவுகளுக்கு அமைய லிபரல் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வமான முடிவுகள் இன்று இரவுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.