அவுஸ்திரேலியாவில் மாவீரர்நாள் 2020

புதன் நவம்பர் 25, 2020

தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், நவம்பர் 27ம் திகதி தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறவிருகின்றன.

2

இந்தவகையில் அவுஸ்திரேலிய  நாட்டிலும் மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் நிலையில், அவுஸ்திரேலியாவின்  விக்ரோரிய  மாநில, மெல்பேர்ன் பேர்வுட் கிழக்கு மைதானம், பேர்வுட் ஹவே, பேர்வுட் கிழக்கு (BURWOOD East Reserve, Burwood Hwy, Burwood East – 3151)  எனும் இடத்தில் நவம்பர் மாதம் 27ம் திகதி, வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30மணி முதல் இரவு 8மணி வரை தேசிய நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

5

சிட்னி மாநிலத்தில் Bowman Hall, Blacktownஇல் நவம்பர் மாதம் 27ம் திகதி, வெள்ளிக்-கிழமை மாலை 5.45 மணிமுதல் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

5

அத்துடன் மெல்பேண் மாவீர் நிகழ்வுகளுக்கு தற்போதய கோவிட் 19 அரசாங்க விதிமுறைகளிற்கு அமைய குறிப்பிட்ட அரை மணிநேரங்களிற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். நிகழ்வு இடத்தில் விக்டோரிய மாநில கொரானா விதிமுறைகள் பின்பற்றப்படும். நிகழ்விடத்தில் தாரளமான வாகன தரிப்பிட வசதிகள் உள்ளன.

5

நவம்பர் 27ம்திகதி எம் தேசத்து புதல்வர்களை நினைவில் நிறுத்தி மரியாதை செய்ய நம் பேதங்களை மறந்து  அனைவரும் திரண்டு வருவோம்.

5

4