அவுஸ்திரேலியாவில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்

திங்கள் ஜூலை 27, 2020

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் காரணமாக எதிர்வரும் நாட்களில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என பிரதிமருத்துவ அதிகாரி மைக்கல் கிட் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் விக்டோரியாவில் 532 பேரும், நியுசவுத்வேல்சில் 17 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் மேலும் ஆறு பேர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இது வரை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 14,935 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள மைக்கல் கிட் 161 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் மேலும் உயிரிழப்புகள் ஏற்படலாம் எனவும் பேராசிரியர் மைக்கல் கிட் குறிப்பிட்டுள்ளார்.