அவுஸ்திரேலியாவிற்கு புதிய பிரதமர்

சனி மே 21, 2022

அவுஸ்திரேலிய பிரதமரை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி தலைவரும் தற்போதைய பிரதமருமான ஸ்காட் மொரிஸனை தோற்கடித்து, தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோனி அல்பெனீஸ் வெற்றி பெற்றுள்ளார்.

இன்று(21) நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 151 உறுப்பினர் இடங்களில் 76 உறுப்பினர் இடங்கள் அவசியம் என்ற நிலையில் அந்தோனி அல்பெனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி 72 உறுப்பினர் இடங்களையும் மொரிஸனின் கட்சி 52 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.