அயோத்தி - சமரச குழுவில் இடம்பெற்ற 3 பேருமே தமிழர்கள்!

சனி மார்ச் 09, 2019

அயோத்தி வழக்கில் தீர்வு காண உச்ச நீதிமன்றம்  நியமித்த சமரச குழுவில் இடம்பெற்றுள்ள 3 பேருமே தமிழர்கள் ஆவார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு? என்பது தொடர்பாக சர்ச்சை நிலவுகிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு  உச்ச நீதிமன்றில்  நடந்து வருகிறது. அந்த நிலத்தை சுமுகமாக பிரித்து கொள்வதில் இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த 3 பேர் கொண்ட சமரச குழுவை  உச்ச நீதிமன்றம் நியமித்தது.
 
இந்த குழுவில்  உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 3 பேருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.