சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்க இந்த பொருட்களை உணவில் சேருங்கள்!

புதன் ஜூலை 03, 2019

சாப்பிட்டவுடன் அமிலமானது வயிற்றில் இருந்து மீண்டும் உணவுகுழாய்க்கு வருவதுதான் பொதுவாக எதுக்களிப்பது என்று அழைக்கப்படுகிறது. இதனால் நெஞ்செரிச்சல்,மார்பு பகுதியில் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் உணவுக்குழாய் சுழற்சி பலவீனமாக இருப்பதாகும்.நீங்கள் உண்ணும் உணவுகள் உங்கள் வயிறு உற்பத்தி செய்யும் அமிலத்தின் அளவை பாதிக்கின்றன.

சரியான உணவுகளை சாப்பிடுவது அமில எதுக்களிப்பு அல்லது இரைப்பை உணவுக்குழாய் எதுக்களிப்பு நோய் ஏற்படுவதை தடுக்கிறது.

எந்தெந்த உணவுகள் உங்களுக்கு சாப்பிட்டவுடன் எதுக்களிப்பு ஏற்படுவதை தடுக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

காய்கறி:-இயற்கையாகவே கொழுப்பு மற்றும் சர்க்கரை குறைவாக உள்ளது,மேலும் அவை வயிற்று அமிலத்தைக் குறைக்க உதவுகின்றன.

பச்சை பீன்ஸ்,ப்ரோக்கோலி,அஸ்பாரகஸ்,காலிஃபிளவர், இலை கீரைகள்,உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை உங்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்வது நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்கும்.

இஞ்சி:- இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, மேலும் இது நெஞ்செரிச்சல் மற்றும் பிற இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு இயற்கையான சிகிச்சையாகும். உணவுகளில் இஞ்சியை சேர்த்து கொள்வதுடன் இஞ்சி டீ குடிப்பதும் உங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்கும்.

ஓட்ஸ்:- முழு தானியங்களை கொண்ட ஓட்ஸ் நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கும் சிறந்த காலை உணவாகும். ஓட்ஸ் வயிற்றில் அதிகமிருக்கும் அமிலத்தின் அளவை உறிஞ்சி கொள்வதோடு எதுக்களிப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது. மேலும் முழு தானிய பிரட், அரிசி போன்றவற்றையும் இதற்காக பயன்படுத்தலாம்.

சிட்ரஸ் இல்லாத பழங்கள்:- சிட்ரஸ் அமிலம் இல்லாத பழங்கள் பொதுவாக நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்கும்.முலாம்பழம், வாழைப்பழம்,ஆப்பிள், பேரிக்காய் போன்ற சிட்ரஸ் இல்லாத பழங்கள் நெஞ்செரிச்சலுக்கான அறிகுறிகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

இறைச்சி மற்றும் கடல் உணவுகள்:-சிக்கன், மீன் வான்கோழி போன்ற குறைந்த கொழுப்புள்ள உணவுகள் உங்களுக்கு அமிலத்துவம் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.இவற்றை எண்ணயைல் வறுத்து சாப்பிடாமல் வேகவைத்து சாப்பிடுவது நல்லது.

முட்டை:- வெள்ளைக்கரு நெஞ்செரிச்சலை தடுப்பதற்கு முட்டையின் வெள்ளைக்கரு ஒரு சிறந்த தேர்வாகும். முட்டையின் மஞ்சள் கருவிடம் இருந்து விலகியே இருங்கள். ஏனெனில் இது அமிலத்துவத்தை அதிகரிக்கும்.

ஆரோக்கிய கொழுப்புகள்:-கொழுப்புகள் அமிலம் உணவுக்குழாயில் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும்.அவகேடா,வால்நட்,ஆளிவிதை, ஆலிவ் எண்ணெய், எள் எண்ணெய் போன்ற்வற்றில் இவை அதிகமுள்ளது.

நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை உட்கொள்வதைக் குறைத்து, அதற்கு பதிலாக ஆரோக்கியமான நிறைவுறா கொழுப்புகளை எடுத்து கொள்வது நல்ல பலனை வழங்கும்.