சார்க் அவசரகால நிதி - 1 கோடி டொலர் வழங்கும் மோதி!

திங்கள் மார்ச் 16, 2020

சார்க் நாடுகளின் தலைவர்களுடன் கொரோனா தொற்று அபாயம் குறித்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஞாயிற்றுக்கிழமை உரையாடிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, "கோவிட்-19 அவசரகால நிதி என்ற பெயரில் ஒரு நிதியை நாம் உருவாக்கலாம். தன்னார்வமாக நாடுகள் இதற்குப் பங்களிக்கலாம்" என்று யோசனை தெரிவித்தார்.

இந்த நிதிக்கு தொடக்க பங்களிப்பாக இந்தியா 1 கோடி அமெரிக்க டொலர்கள் வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.