சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

வியாழன் மார்ச் 14, 2019

போலி தகவல்களை வௌியிட்டு இராஜதந்திர கடவுச்சீ்டடு பெற்று கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 04ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இன்றைய வழக்கு விசாரணையின் போது மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா நீதிமன்றில் ஆஜராகியிருந்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். 

எனினும் அரசதரப்பு பிரதி செலிசிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் வௌிநாடு சென்றுள்ளதால் வழக்கை ஏப்ரல் 04ம் திகதிக்கு ஒத்தி வைத்ததுடன், அன்றைய தினம் டில்வின் சில்வாவை நீதிமன்றில் ஆஜராகுவதற்கும் உத்தரவிடப்பட்டது. 

கடந்த ஆட்சிக் காலத்தில் போலி தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்று கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.