சசிகலாவை கொல்ல சதி? திட்டமிட்டு கொரோனாவை பரப்பியதாக ஆந்திர முதல்வர் குற்றச்சாட்டு!

சனி சனவரி 23, 2021

கொரோனா ஊரடங்கு காலத்தில் பத்து மாத காலமாக பார்வையாளர்களை யாரும் அனுமதிக்காத சிறைத்துறை, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது திட்டமிட்ட அரசியல் சதி என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: சட்டப்படி நியாயமாக தரப்பட வேண்டிய தண்டனை கால குறைப்பு கூட தரப்படவில்லை எனும் போது எந்த அளவுக்கு கர்நாடக ஆட்சியாளர்கள் செயல்பட்டுள்ளனர் என்று நாம் யூகிக்கலாம்.

இவ்வளவு சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவும் மோசமான சிறையில் தமிழகத்தில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் ஆளுமையை கொடுமைப்படுத்தியது தமிழர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

அவர்களுக்கு சிறையில் வேண்டுமென்றே இதுபோன்ற தொற்று நோய்களை பரப்பி அவரை சிகிச்சை மூலமாக கொல்வதற்கு சதி செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் வலுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.