சசிகலாவின் விடுதலை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது

புதன் நவம்பர் 18, 2020

சசிகலாவின் விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலா விடுதலை குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு ‘‘சசிகலாவின் விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது’’என்றார்.

மேலும், ‘‘7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் 313 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 6 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். உள்ஒதுக்கீடு குறித்து பெருமை பேசவில்லை. பெருமை அடைகிறேன். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் கொள்கை முடிவு. இந்தியாவிலேயே நீட் தேர்வு வேண்டாம் என எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான்’’ என்றார்.